நேற்று சிகிச்சைக்கு பிறகு வனத்திற்கு சென்ற யானை இன்று உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சுமார் 55 வயதுடைய காட்டு யானை, நாட்டு வெடிகுண்டை கடித்ததில், அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நாட்களாக காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தது.

இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. 

இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. மேலும், நோய்வாய்பட்ட யானையை தொடர்ந்து, வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நரசிபுரம் அருகே வனப்பகுதியில் இந்த யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...