விற்பனைக்கு தயாரான பொது இடம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 64-வது வார்டில், சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவில் ராம் ரெசிடென்சி என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு 23 சென்ட் அளவிற்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் அமைந்துள்ளது.



பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய, குடியிருப்பு உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு செயற்பாட்டாளரான தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட இருந்த பொது இடத்தை மீட்ட அதிகாரிகள், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...