சோதனை என்ற பெயரில் சித்ரவதை: என்.ஐ.ஏ., மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் என்.ஐ.ஏ., விசாரணை வட்டத்திற்குள் உள்ளனர். இந்தக், கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக, மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 4 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் அத்துமீறி அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்வதாகக் கூறி பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகிய 3 பேரும் தங்களது குடும்பத்தினருடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், அதிகாலையில் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..?. மேலும், சசிக்குமார் கொலை வழக்கில் தங்களை வேண்டுமென்றே குற்றவாளிகளாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால், தங்களது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Video: Laxman

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...