நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், நெடுவாசலுக்குப் பதிலாக வேறு இடம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம் கடிதமும் எழுதியுள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், நெடுவாசலுக்குப் பதிலாக வேறு இடம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம் கடிதமும் எழுதியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ‘ஜெம் லெபாரட்டரி’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி, மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) வழங்கப்பட்டிருந்த குத்தகையை ஜெம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மாற்றித் தரவில்லை. 

மேலும், திட்டத்தை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஜெம் நிறுவனம் தயாராகியுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு 2 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஜெம் நிறுவன முதுநிலை அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான ஹரிபிரசாத் கூறும்போது, ‘‘ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க தாமதமாவதால் எங்களுக்கு இழப்பு அதிகமாகி வருகிறது. நாங்கள் லாபத்துக்காக தொழில் செய்யும் வியாபாரிகள். 

நெடுவாசலில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே, நெடுவாசல் திட்டத்தைக் கைவிட தயாராகவுள்ளோம். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மாற்று இடம் வழங்கக் கோரி மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

நெடுவாசல் குத்தகையை தமக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசுக்கு ஜெம் நிறுவனம் சார்பில் இதுவரை 10 கடிதங்களும், மத்திய அரசு சார்பில் 3 கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும், தமிழக அரசு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதி மக்கள் 170 நாட்களுக்கு மேலாக நடத்திய போராட்டத்தின் பலனாக இந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...