கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரணைக்கு என்று தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாததால், காவல் நிலையம் சென்ற பிரித்தி, காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது, மாலை விடு திரும்புவார் என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் மனோகர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திரும்பிச் சென்றார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...