'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது : அரவிந்த்சாமி வருத்தம்

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு நடிகர் அரவிந்த்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு நடிகர் அரவிந்த்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

'இரும்புத்திரை', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'நடிகையர் திலகம்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய நான்கு படங்கள் இன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மம்மூட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படத்துக்கு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பிரச்சினைகள் சுமுகமாக முடிக்கப்பட்டு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போவது குறித்து அரவிந்த்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '''பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மிகவும் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற பிறகும் படம் வெளியாவது தள்ளிப்போனது வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. படம் தள்ளிப்போனது தொடர்பாக எந்தக் காரணமும் தெரியவில்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...