முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நீலகிரி: முதுமலை வனப் பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு இரு முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டுக்கான முதல் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: முதுமலை வனப் பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு இரு முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டுக்கான முதல் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகமும் ஒன்று. 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரியவந்தது. வனப் பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு இரு முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான முதல் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியினை முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா தொடங்கி வைத்தார். முன்னதாக கடந்த 10-ம் தேதி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள பயிற்சி அரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 36 குழுக்களைச் சேர்ந்த வனத் துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள், தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய நான்கு சரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு குழுவிலும் வனக் காப்பாளர், வனக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர் என 3 பேர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப் பகுதியில் தினந்தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லும் இந்த குழுவினர் நேரடி கணக்கெடுப்பு மற்றும் புலிகளின் கால்தடம், எச்சம் உள்ளிட்டவற்றைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். அத்துடன் நீர் நிலைகளுக்குச் சென்றும் கணக்கெடுத்து வருகின்றனர். களப் பணியின் போது அவர்கள் எடுக்கும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் செல்போன் ஆப் மூலம் பதிவு செய்கின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி வருகிற 15-ம் தேதி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் 16-ம் தேதி அனைத்து குழுவினரும் சேகரித்த தகவல்களை வனத் துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், "36 குழுக்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் போதிய ஊழியர்கள் இருப்பதால் தன்னார்வலர்கள் யாரும் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதி கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் வெளிமண்டல பகுதியில் உள்ள மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கும்." என்றார்.

இந்த கணக்கெடுப்பின் போது புலிகள் மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளும் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...