கர்நாடக தேர்தல் முடிந்த கையோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும். 

இந்த சூழலில், கடந்த  20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே, எண்ணெய்  நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணெய்  நிறுவனங்கள் மறுத்து வந்தன. 

இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல்  இன்று ரூ.77.61-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...