உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு : இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சியாம் என்பவர் "அமிர்தம் உணவகம்" நடத்தி வந்தார். இந்த உணவகம் மழையினால் சுவர் ஈரமாகி வலுவிழந்து இருந்து வந்தது. 

இந்த நிலையில், இந்த ஹோட்டல் பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

இந்த விபத்தில் வடமாநில பெண் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய ரம்யாவை பொதுமக்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 



இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா, திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ரம்யாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...