மனசோர்வடையும் மாணவர்களுக்கு ஹெல்ப்லைன், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

கோவை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மன சோர்வடையும் மாணவர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மன சோர்வடையும் மாணவர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை:-

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகிறது. அடுத்து, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளன. மூன்று தேர்வுகளையும், 27.72 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி போன்ற காரணத்தால், சில மாணவர்கள் தவறான முடிவுகள் மேற்கொள்வதைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானதும், மனச் சோர்வடையும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மனச் சோர்விலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கை அளிக்கவும், உரிய ஆலோசனைகள் வழங்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வி இயக்ககத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, தகவல் மையம் இயங்கி வருகிறது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், இம்மையத்தை, 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம்.

இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற, மனநல வல்லுனர்கள், மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில், பெற்றோர் கவனத்துடன் இருந்து, மனச் சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து மாணவர்களுக்கும், நல்ல எதிர்காலத்தை, அரசு உருவாக்கி வருகிறது.

எனவே, பெற்றோரும், மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும், ஊடகத்துறை நண்பர்களும் சேர்ந்து, தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் அனைவரையும், உற்சாகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் நகல் - மறுகூட்டல் 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விரும்பும் மாணவர்கள் அவர்களது பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம். 

விடைத்தாள் நகல் பெற 

பகுதி மொழி 1-க்கு : ரூ.550/- 

பகுதி மொழி 2 (ஆங்கிலம்) : ரூ.550/- 

மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் : ரூ.275/- 

மறு கூட்டலுக்கு 

பகுதி மொழி 1 மற்றும் பகுதி மொழி 2 (ஆங்கிலம்) : ரூ.350/- 

மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் : ரூ.205/- 

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...