காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி தமிழகம் மற்றும் கர்நாடகம் எந்தவித அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி தமிழகம் மற்றும் கர்நாடகம் எந்தவித அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு தரப்பில் 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவை, காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும். இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பவையாகும்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்றவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடகத்தில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வாதம் செய்தது. காவிரி அமைப்பின் முடிவை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை எனில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கலாம் என்ற விதியை மாற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டுமே உண்டு, மத்திய அரசுக்கு இல்லை. இதில், கர்நாடகா மற்றும் தமிழகம் மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. நீர்ப்பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவே இறுதியானது. காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க தமிழக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்சநீதின்ற நீதபதி உத்தரவிட்டார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...