கோவையில் ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் நில அளவையாளராக கதிரேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் வாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி 2.5 ஏக்கர் நிலத்தைப் பட்டா உட்பிரிவு மாற்ற கதிரேசனை அணுகியுள்ளார். அப்போது, பட்டா உட்பிரிவு மாற்ற விவசாயிடம் ரூ. 35 ஆயிரம் லஞ்சமாக தருமாறு நிலஅளவையாளர் கதிரேசன் கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்த விவசாயி, மேற்கொண்டு பணத்தை வழங்க விரும்பவில்லை.



எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட விவசாயி, நிலஅளவையாளர் கதிரேசனிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கதிரேசனை கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிங்காநல்லூரில் உள்ள கதிரேசனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...