கல்வி உரிமை சட்டத்தின்கீழ் இலவச கல்வி; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 



ஏழை, மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும், விண்ணப்பங்களை இணையதளம் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார வள மையம், தமிழக அரசின் இ-சேவை மையங்களிலும் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். மொத்தமுள்ள 1 லட்சம் இடங்களுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில், முன்னுரிமை அடிப்படையிலும், குலுக்கல் முறையிலும் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், விண்ணப்பம் நிராகரிப்பட்டதற்கான காரணங்களை சம்பந்தபட்ட பள்ளிகள் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பள்ளியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...