திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்: காவிரி வழக்குகள் முடித்து வைப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

மாநிலஅரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல்திட்ட அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும். நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும். முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம். மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டெல்லியில் செயல்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இறுதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...