கோவையில் தினகரன் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு

கோவை: அடிவாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறையை சட்டப்படி சந்திக்க இருப்பதாக அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை தெரிவித்துள்ளார்.


கோவை: அடிவாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறையை சட்டப்படி சந்திக்க இருப்பதாக அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை தெரிவித்துள்ளார்.

வடவள்ளி பகுதியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்தவர்களை உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்தனர். இதில் இரு பெண்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் தொடர்பாக, அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி கருப்புசாமி கோவில் தினகரன் ஆதரவாளர்கள் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 58 நிர்வாகிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை இரண்டு மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவு இரண்டு மணியளவில் குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் 147, 148, 188,341 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, இன்று காலை அ.ம.மு.க., நிர்வாகிகள் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது பொய் வழக்கு போட்ட காவல்துறையினருக்கு எதிராகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை கூறுகையில், "பொய் வழக்கு போட்டு எங்களை கைது செய்துள்ளனர். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். கட்சி நிர்வாகிகளை அடித்தும், காரை சேதப்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்யாமல் ஆளுங்கட்சி அமைச்சருக்கு சாதகமாக உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிலை காவல்துறையினர் கண்டிப்பாக சொல்ல வேண்டிய நிலை வரும்." என்றார்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.,வின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை தங்களுக்கு பாத்தியப்பட்ட பகுதி போல சர்வாதிகார போக்கில் செயல்படும் அமைச்சர் வேலுமணிக்கும், அவரிடம் கை கூலி போல் செயல்படும் காவல்துறைக்கும் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...