நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

பெங்களூர் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியாகின. இதில் பா.ஜ.க., 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும்,  ம.ஜ.த., 38 தொகுதிகளிலும் வென்றன. இதர பிரிவில், 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க.,வை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. 

இதையடுத்து கடந்த 17-ம் தேதி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்ட்டுகளில் பத்திரமாக உள்ளனர். 

காங்கிரசில் இரு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே மதியம் வரை சட்டசபைக்கு வரவில்லை. அவர்கள் ஒரு வேளை சட்டசபை வராவிட்டாலும் கூட பா.ஜ.க., நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது. எனவே ஒரு வேளை பா.ஜ.க., நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே ஷிமோகா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறாவிட்டால் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...