ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - தமிழக அரசு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை கடந்த மாதம் 9-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் அனுமதியின்றி தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிராகரித்தல் ஆணையை எதிர்த்து அந்த நிறுவனம் கடந்த 17-ம் தேதி மேல் முறையீடு செய்தது. இந்த இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அந்த ஆலைக்கு எதிராக கடுமையாக வாதாடியுள்ளனர். இந்த அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் மற்றும் சில அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்த காரணத்தால் வேறு வழியின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. மேலும், அம்மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டப்பூர்வ மேல் நடவடிக்கைகள் எடுக்கும். இதனை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...