தேசிய அளவில் டிரென்டான தூத்துக்குடி 'ஸ்டெர்லைட் போராட்டம்'

பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.

பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்டெர்லைட் போராட்டம்' டிரென்ட் ஆகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்ததால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டை வீசினர்.

இதனால், அலறியடித்துக் கொண்டு ஓடிய போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடத்தப்பட்டு வரும் போராட்டம், டுவிட்டரில் தேசிய அளவில் டிரென்டாகியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து, ஹேஸ்டேக் ஸ்டெர்லைட் போராட்டம் (#Sterlite protest) என டைப் செய்து தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இதனால், இது முதல் டிரென்டாக உள்ளது. இதேபோல, தூத்துக்குடி (Thoothukudi), துட்டிகோரின் (Tuticorin) உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளும் டிரென்டாகி வருகிறது. 

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...