ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.


தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகு விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி பெற்றதை எதிர்த்தும், அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் வேறு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதா என்று கூறியும் பேராசிரியர் பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...