தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு

கோவை: தமிழகத்தில் 2018-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கோவை: தமிழகத்தில் 2018-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக, அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

எதிர்வரக் கூடிய 2018-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்(Australian Rainman InternationalV.4.3 Software) என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2018-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்பிற்கான மழையளவு பின்வருமாறு:-

கோயமுத்தூர், சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர்,  சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், இராமநாதபுரம்,  நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர்,  திருநெல்வேலி,  தஞ்சாவூர், திருச்சி, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களாக ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவை, புதுக்கோட்டை,  திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...