ராணுவ பணித்தேர்வு: முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வகுப்பு

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி படைப்பணியில் அலுவலராக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தினரால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவ பணித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் 6 மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான, இணையதள முகவரி www.exweletutor.com ஆகும்.

எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொழிற்கல்வி, மருத்துவப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கு கல்லூரியில் சேருவதற்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...