தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்தனர். கலவரம் மேலும் பரவாமல் தடுப்பதற்காக ஐந்து நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழக போலீசார் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் உண்மை வெளிவராது எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரீஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...