தூத்துக்குடி விவகாரத்தில் ஸ்டாலின் நாடகமாடுகிறார்: முதலமைச்சர் பழனிசாமி கடும் தாக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தை வைத்து தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் நாடகமாடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தை வைத்து தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் நாடகமாடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- 11 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பெயரில் நான் கலந்து கொண்டேன். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென எழுந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்கு, பின்னர் முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டத்தில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசியுள்ளார். 2013-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து, சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆலையின் பணியை நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்தது விரும்பத்தகாத சம்பவம். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில பேர் செயல்பட்டு கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலியாக்கிவிட்டனர். வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...