கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தணன் குளம், உக்கடம் பெரியகுளம், நரசம்பதி, செல்வ சிந்தாமணி, வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய எட்டு குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு  அமைப்பின் சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா..? என்பது குறித்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில்  அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, செல்வ சிந்தாமணி  குளத்திலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.



இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி கன்சல்டன்சியைச் சார்ந்த சுபாஷ், கோபாலகிருஷ்ணன், ராக் அமைப்பின் ரவீந்திரன் மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, குளங்களில் இருந்து நீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் விரைவில் சரி செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...