கோவை பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது

கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.


கோவை: சர்வதேச வாகன சந்தையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

2016-2017-ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்கான உறவில் சிறந்து விளங்கிய நிறுவனத்திற்கு மத்திய அரசின் விருது பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், இணக்கமான தொழில்துறைகளை வளர்ப்பதற்கு புதுமையான அணுகுமுறைகள், மனித இழப்புகள் தவிர்த்தல், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு சிறந்த நிறுவனத்திற்கான தேர்வு நடைபெற்றது.

கடைசியில், 14 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, கோவையைச் சேர்ந்த பிரிக்கால் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் வழங்கினார்.

விருது பெற்றது தொடர்பாக பிரிக்கால் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறுகையில், "தொழிலாளர்களிடையே முற்போக்கு சிந்தனை மற்றும் கடின உழைப்பை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறந்த நிர்வாகம், தொழிலாளர்களின் கடின உழைப்பே இந்த விருதை வெல்ல முக்கியக் காரணம். எனவே, எங்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடின உழைப்புகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...