விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கடனுதவி அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் விவசாயிகள் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் விவசாயிகள் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க 50 சதவிகிதம் வரை மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த விவசாயிகள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நில உடமைக்கு ஆதாரமான கணினி வழிபட்டா மற்றும் அடங்கல் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய சிறு, குறு விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலுககத்தில் உரிய விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...