சட்டமன்றத்திற்கு பயந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது - டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

 

சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பிரச்சினையை எதிர் கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று சீல் வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். 

கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை உட்பட 50 அ.ம.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது. காவல் துறையினர் மனசாட்சி இல்லாமல் செயல்படுகின்றனர். தவறு செய்த அ.தி.மு.க.,வினர் சிறைக்குச் செல்வார்கள். தூத்துக்குடியில் போராடியவர்கள் தீவிரவாதிகள் என்று சொன்னால், இறந்தவர்களுக்கு எதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுகின்றது? தூத்துக்குடி பிரச்சினையில் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் ஒடுக்கப்படுகின்றது. 

நடிகை ஸ்ரீ தேவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் ஏன் அமைதியாக இருக்கின்றார்? தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் போது ஊடகங்களை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர்களை திட்டுவார்கள் என்பதாலேயே ஊடகங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை.

தூத்துக்குடி இன்னும் அமைதியான நிலைக்கு வரவில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றுகின்றது. கோவை போலீசாரால் காக்கிச்சட்டையின் மரியாதை போய்விட்டது. டி.டி.வி., தினகரனின் ஆதரவாளர்களை காவல் துறையின் மூலம் ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைக்கின்றனர். அது நடக்காது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...