சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாய், மகன் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

வீரபாண்டி பகுதி தோட்டத்து தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி. நெசவு தொழிலாளியான இவர், அவரது தாயார் பார்வதியை அழைத்துக் கொண்டு கண் பரிசோதனை செய்வதற்காகச் சென்றுள்ளார். திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் இருவர் மீதும் மோதியது. 

இந்த விபத்தில் அழகர்சாமியின் உயிர் பிரிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடினார். இரண்டு பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...