கோவையில் யானை தாக்கி மன நலம் பாதிக்கப்பட்டவர் பலி

கோவை: கோவையை அடுத்து நரசீபுரம் பகுதியில் யானை தாக்கியதில் மன நலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

கோவை: கோவையை அடுத்து நரசீபுரம் பகுதியில் யானை தாக்கியதில் மன நலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக 35 வயது மதிக்கத் தக்க பெண் யானையும் 5 வயது மதிக்கத் தக்க குட்டியும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சுற்றி வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு  நரசிபுரம் வனத்தில் இருந்து வெளி வந்த அந்த இரண்டு யானைகளும் அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டிய யானைகள் சின்ன ஆறு அருகே நஞ்ஜம்மாள் என்பவரது தோட்டத்தில் புகுந்தது. வீட்டில் தன் பேரனுடன் இருந்த அவர் யானையின் சத்தம் கேட்டு வீட்டைப் பூட்டி அமைதியாக இருந்தனர்.

அப்போது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த புன்னாக்கை யானைகள் சாப்பிட்டது இதனால் பயத்தில் பாட்டியும், பேரனும் வீட்டில் இருந்த பீரோவின் பின் பகுதியில் ஒதுங்கினர். தொடர்ந்து அங்கும் வந்த வனத்துறையினர் நஞ்ஜம்மாள் வீட்டில் யானை நிற்பதைக் கண்டு பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.

பின்னர், சின்னாறு பகுதியில் வந்த யானைகள் அதிகாலையில் அவ்வழியே நடந்து வந்த நபரை தாய் யானையும், குட்டியும் சேர்ந்து தாக்கியது. இதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். காலையில் அவ்வழியாக வந்தவர்கள் யானை தாக்கி ஒருவர் இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா விசாரணை மேற்கொண்டார். இதில் இறந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டதும் கடந்த சில நாட்களாக அவர் அப்பகுதியில் சுற்றி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்ட வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...