உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வங்கி ஊழியர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

நீலகிரி: ஊதிய உயர்வு கோரி நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வங்கி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: ஊதிய உயர்வு கோரி நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற வங்கி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் உதகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த போலீசார், இங்கு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசார், இங்குப் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தில் போராட்டத்தை தொடருமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பிய வண்ணம் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்டனர். ஆனால், மீண்டும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தனித்தனியாகச் செல்லுமாறும், கோஷங்களை எழுப்பினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர். 



இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஸ்டேட் வங்கி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல, திருப்பூரில் உள்ள வங்கிகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் பொதுமக்கள், பணிக்கு செல்பவர்கள், வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். முறையான ஏற்பாடுகள் செய்யாதது குறித்தும் அவர்கள் குறை கூறினர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளில் 3,000-த்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரம் கோடி அளவிலான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...