மக்களுக்காக மாநில வரியை குறைத்த கேரளா: பெட்ரோல், டீசல் விலை ரூ. 1 குறைப்பு

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

கேரளா: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரள அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி நிர்ணயித்து வரும் நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. 

16 நாட்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.42-க்கு இன்று விற்கப்படுகிறது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு ரூ. 73.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எரிபொருள் மீதான மாநில அரசு வரியை கேரளா குறைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. 

கடந்த நவம்பர் 2017 நிலவரப்படி, டீசல் மீது 24.52 சதவீதமும், பெட்ரோல் மீது 31.8 சதவீதம் வரியும் கேரளா வசூல் செய்கிறது. இவை போக கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரியும் கேரளாவில் வசூலிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் எரிபொருட்கள் வரி மூலம் கேரள அரசு ரூ 7,795 கோடியை வருவாயை ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...