வேளாண் பொறியியல் மாணவர்களுக்கான 30 நாள் பயிற்சி கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.



இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.



மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.



Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...