சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: கோவை அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி மேட்டுப்பாளையம் - அன்னூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமம்பாளையம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்காமல் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 



மேலும், 2 மணி நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.​

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...