கோவையில் பொதுமக்களை குச்சியால் தாக்கும் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

செல்வபுரம் காவல் நிலையத்தி்ல் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் பாஸ்கர். நேற்று இரவு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை குச்சியால் தாக்கினார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மட்டுமல்லாது. நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே அமர்ந்து செல்பவர்களையும், தான் வைத்துள்ள குச்சியால் அடித்து வந்துள்ளார். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும் தாக்கியுள்ளார்.



அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் பலரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, போக்குவரத்து காவலர் பணியின் போது குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவலரின் தவறான நடவடிக்கையால் செல்வபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Video: Laxman

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...