வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்ட விவகாரம் : சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை ரூ. 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல, ஏராளமானோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த 2-ம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் வங்கி நிர்வாகத்தினர் மூடினர். தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 40,000 முதல் ரூ. 4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியைக் கொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...