கோவையில் தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பட்டப்பகலில் தொழில் அதிபரை கத்திமுனையில் கடத்திச் சென்ற சுமார் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காட்டூர் சாலையில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜான் கோ பிடல். இவரை தொழில் விஷயமாக கரிகாலன் என்பவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தொழிலதிபர் பிடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இரண்டு கார்களில் வந்த கும்பல் அலுவலகத்தின் முன் உள்ள கண்ணாடி கதவை உடைத்தனர். பின்னர் அந்த நிறுவனத்தின் வேலை செய்யும் பெண்களைக் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளரையும் கடத்திச் சென்றனர். அதோடு, அந்த நிறுவனத்தில் இருந்த கணினி போன்ற சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...