காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளை மரத்தின் கீழ் கட்ட வேண்டாம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியசாகவும் இரவு நேர வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. கோவையில் கோடை மழை 130 மி.மீ., எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. 19 முதல் 24 கி.மீ., வரை வீசவும் வாய்ப்புள்ளது. இது ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக வீசாது, அவ்வப்போது சற்று குறைந்தும் காணப்படும். குறிப்பாக, வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், சிதிலமடைந்த மரங்களை, மரக் கிளைகளை முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது. காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் மரங்களோ அல்லது மரத்தின் கிளைகளோ கீழே விழும் அபாயம் உள்ளதால், கால்நடைகளை மரங்களுக்குக் கீழே கட்ட வேண்டாம் 

அதேபோன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். கரும்புகளுக்குக் கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது, திருப்பூரில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...