சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய ராமலிங்கம் நகர் மக்கள்

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கடந்த 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அன்றைய தினமே, அந்த பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்றும் வகையில் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

தொடர்ந்து, சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கென இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இதில் கோயம்புத்தூர் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ஜனார்த்தனன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுப்புறத்தில் மரம் நடுவதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டனர்.



கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...