சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.



கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.



இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.



இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...