போளூவாம்பட்டி பகுதியில் வீடுகளை சூறையாடிய யானை கூட்டம் மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவையை அடுத்த போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியாகவும், கூட்டமாகவும் அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் வாழை, சோளம், தக்காளி தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. 

நேற்று முன்தினம் மாலை, வனத்தில் இருந்து வெளியேறிய ஒன்பது யானைகள் கொண்ட கூட்டம், முள்ளங்காடு வழியாக சிறுவாணி சாலையை கடந்து, முட்டத்து வயல் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்து தள்ளியது. பின்னர், குளத்தேரி பகுதியை நோக்கி சென்ற யானை கூட்டம், அங்கிருந்த இரண்டு வீடுகளை இடித்து தள்ளியது. 

அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள், காயமின்றி தப்பினர். அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி, யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையினரும் அங்கு விரைந்தனர். சுமார் நான்கு மணி நேரம் போராடி, யானை கூட்டத்தை தாணிகண்டி என்ற வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...