ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ரேஹன் எஸ்.பெல் என்பவர் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒரு வாரம் தாண்டிவிட்டது. அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றபோதிலும், காவிரி தொடர்பாக அவர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட போட்டோவும் வெளியாகாதது எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதியை அறிக்கை வெளியிடும் அளவுக்கு தூண்டியது.
இதை தொடர்ந்து, நேற்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல் நலம் குறித்து உரிய தகவலை வெளியிட வேண்டும். ஆளுநர் தலையிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

குடியரசு தலைவருக்கு மனு:
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள ரேஹன் எஸ்.பெல் என்பவர், இதுகுறித்து குடியரசு தலைவருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநரிடமிருந்து, ஜெயலலிதா உடல் நிலை குறித்த அறிக்கையை கேட்டு பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்: 
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அல்லது தனியார் டாக்டர்கள் மூலம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அதன் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வசதி செய்ய வேண்டும் என்றும் ஹேரன் எஸ்.பெல் தனது மனுவில் கோரியுள்ளார்.

குடியரசு தலைவர் ஆட்சி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பணியாற்றும் செயல் திறனோடு உள்ளாரா என்பதை ஆளுநர் மூலம் குடியரசு தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி, அவருக்கு செயல் திறம் இல்லை என தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அறிக்கை அவசியம்:
ஒருவேளை இந்த மனுவை குடியரசு தலைவர் பரிசீலித்தாலும், முதலில் ஆளுநரிடம் அறிக்கை கேட்காமல் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிந்தால்தான் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். ஆனால் முடங்கிவிட்டதாக யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு அரசு சார்பில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...