உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: இன்று மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நீதிபதி ஆணையிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றே சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே மேல்முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரி திமுக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...