வேளாண் காலநிலை ஆராய்ச்சி ஆய்வில் தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னறிவிப்பு

தமிழ்நாட்டில் எதிர் வரக்கூடிய 2016 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழைமனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது. இதற்கான தகவல்கள் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து பெறப்பட்டன. தவல்கள் கிடைக்காத இடங்களில் இருந்து மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்களை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2016ம் ஆண்டின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60சதவிகித வாய்ப்பாக எதிர்பார்க்கப்படும் மழையளவு சேகரிக்கப்பட்டுள்ளது.வேளான்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து பெறப்பட்டன. தவல்கள் கிடைக்காத இடங்களில் இருந்து மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்களை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2016ம் ஆண்டின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60சதவிகித வாய்ப்பாக எதிர்பார்க்கப்படும் மழையளவு சேகரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆண்டின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வடகிழக்கு பருவமழை பற்றிய சேகரிக்கப்பட்ட சராசரி மழையளவு :

மேற்கு மண்டலம் சராசரி மழையளவு:
1.கோவை நீண்டகால சராசரி மழையளவு 328 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 343 மி.மீ 
2.திருப்பூர்  நீண்டகால சராசரி மழையளவு 314 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 323 மி.மீ 
3.ஈரோடு  நீண்டகால சராசரி மழையளவு 314 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 315 மி.மீ

வட கிழக்கு மண்டலம் சராசரி மழையளவு:
1. சென்னை நீண்டகால சராசரி மழையளவு 788 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 731 மி.மீ 
2. திருவள்ளூர் நீண்டகால சராசரி மழையளவு 588 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 558 மி.மீ 
3.காஞ்சிபுரம்  நீண்டகால சராசரி மழையளவு 640 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 626 மி.மீ
4.வேலூர் நீண்டகால சராசரி மழையளவு 348மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 348 மி.மீ 
5.திருவண்ணாமலை நீண்டகால சராசரி மழையளவு 445 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 432 மி.மீ 
6.விழுப்புரம் நீண்டகால சராசரி மழையளவு 498 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 455 மி.மீ

வட மேற்கு  மண்டலம் சராசரி மழையளவு:
1.சேலம் நீண்டகால சராசரி மழையளவு 369 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 366 மி.மீ
2.நாமக்கல் நீண்டகால சராசரி மழையளவு 291 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 278 மி.மீ 
3.தர்மபுரி  நீண்டகால சராசரி மழையளவு 329 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 355 மி.மீ
4.கிருஷ்ணகிரி நீண்டகால சராசரி மழையளவு 289 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 302 மி.மீ 

காவேரி பாசன மண்டலம் சராசரி மழையளவு:
1.திருச்சிராப்பள்ளி நீண்டகால சராசரி மழையளவு 390 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 374 மி.மீ 
2.தஞ்சாவூர் நீண்டகால சராசரி மழையளவு 549 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 530 மி.மீ 
3.அரியலூர் நீண்டகால சராசரி மழையளவு 544 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 520மி.மீ
4.பெரம்பலூர் நீண்டகால சராசரி மழையளவு 440மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 432 மி.மீ 
5.கரூர் நீண்டகால சராசரி மழையளவு 314 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 344 மி.மீ 
6.திருவாரூர் நீண்டகால சராசரி மழையளவு 717 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 756 மி.மீ
7.கடலூர்  நீண்டகால சராசரி மழையளவு 696மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 689 மி.மீ 
8.நாகப்பட்டினம் நீண்டகால சராசரி மழையளவு 937 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 968 மி.மீ 

தெற்கு மண்டலம் சராசரி மழையளவு:
1.தூத்துக்குடி நீண்டகால சராசரி மழையளவு 425மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 438 மி.மீ 
2.திருநெல்வேலி நீண்டகால சராசரி மழையளவு 465 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 436 மி.மீ 
3.விருதுநகர் நீண்டகால சராசரி மழையளவு 418 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 415 மி.மீ
4.புதுக்கோட்டை நீண்டகால சராசரி மழையளவு 404மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 402 மி.மீ 
5.இராமநாதபுரம் நீண்டகால சராசரி மழையளவு 490 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 517 மி.மீ 
6.சிவகங்கை நீண்டகால சராசரி மழையளவு 421 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 419 மி.மீ
7.தேனி நீண்டகால சராசரி மழையளவு 357மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 336 மி.மீ 
8.மதுரை நீண்டகால சராசரி மழையளவு 418 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 450 மி.மீ 
9.திண்டுக்கல் நீண்டகால சராசரி மழையளவு 435 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 437 மி.மீ

அதிக மழை பெரும்  மண்டலம் சராசரி மழையளவு:
கன்னியாகுமாரி  நீண்டகால சராசரி மழையளவு 495 மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 509 மி.மீ

மலை மற்றும் அதிகம் உயரமுள்ள மண்டலம்: 
நீலகிரி நீண்டகால சராசரி மழையளவு 476மி.மீ எதிர்பார்க்கப்படும் மழையளவு 474 மி.மீ

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...