தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவன்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசிய படை மாணவன் ஆஷிக் டெல்லியில் நடைபெற்ற .22 துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தான். தேசிய படை மாணவர்களுக்காக 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனியில் சார்பாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி நடைபெற்றது.

இதில் கோவையில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தேசிய படை மாணவன் ஆஷிக் தேர்வு பெற்றான். பின்னர், கந்தசாமி கவுடர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் .22 துப்பாக்கி சுடுதல் பிரிவில் குரூப்பிங் தேர்வில் முதலிடம்  பிடித்தார்.



தொடர்ச்சியாக, சேலம், நாகர்கோயில், தூத்துக்குடி, மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று மதுரையில் நடைபெற்ற  கலந்து கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் சார்பாக தேசியபடை மாணவர்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்பு, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான .22 துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இம்மாணவனை பள்ளியின் தாளாளர்  ஜி.கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, பள்ளி தலைமையாசிரியர் மனோரமா மற்றும் தேசிய மாணவர்படை ஆசிரியர் குமரன் ஆகியோர் பாராட்டினார். 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...