கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்படுவதால் புதிய சிறுபாலம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 12க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியிலுள்ள இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் எளிதாக வடிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மழைக்காலங்களில் ஆணைகட்டி பரப்பளவிலுள்ள மழைநீர், பன்னிமடை வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையிலிருந்து இராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் வழியாக செல்கிறது. அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. எனினும், மழைக்காலத்தில் இராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.


இதனால், அப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் புதிதாக சிறுபாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இது மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...