ஓசையின் சார்பில் நடைபெற்ற 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி இன்று நிறைவு பெற்றது

தன்னார்வலர் அமைப்பான ஓசையின் சார்பில் கோவை கோட்ட தமிழ்நாடு அரசு வனத்துறை, மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டொபர் 4ம் தேதி முதல் தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அரியவகை பறவை மற்றும் விலங்கு இனங்கள், வண்ணத்து பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், மனித விலங்கு மோதல் குறித்தான படங்களும் இடம்பெற்றிருந்தன. உயிர் நிழல் 2016 என்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கண்டு ரசித்துச் சென்றனர். 

இந்தக் கண்காட்சியின் நிறைவு நாள் அக்டோபர் 9ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓசை அமைப்பின் அமைப்பாளர் ச. அகிலா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக கண்காட்சி நாட்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, விடாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிபெற்றோர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...