தீபாவளிக்கு தமிழகத்தில் 21,289 சிறப்பு அரசுப்பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னையில் இருந்து 11,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு தமிழகத்தில் மொத்தம் 21,289 பேருந்துகள் அரசுப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அக்டோபர் மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 11,225 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அதோ போல, தமிழகத்தின் இதர பகுதகளில் இருந்து 10,064 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக, சென்னை நகரின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்:


-காஞ்சிபுரம். புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு தேர்தல் ஆணையப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை, வழித்தடத்தில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம் சாணிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

-ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்துகள் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

-மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருத்துக்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

-கோயம்பேட்டில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அக்டோபர் 26 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்பவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...