பள்ளி மாணவிகள் எழுதி, இசையமைத்த டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாடல் குறுந்தகடு வெளியீடு

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்ற கோவை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான, அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொசு புகை வண்டி மூலம் புகையடித்தல், கொசு மருந்து தெளித்தல், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளில் அகற்றுதல், பள்ளி, கல்லூரி மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமும் டெங்கு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை  எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளான 10-ம் வகுப்பு பயிலும் அபிநயா மற்றும் அவரது சகோதரி 8-ம் வகுப்பு பயிலும் கல்யாணி ஆகிய இருவரும் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு தொடர்பான  பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலையும் பாடிய முதல் குறுந்தகடினை கோவை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார். மாநகராட்சி கல்வி அலுவலர் மூலம் மாநகராட்சி மற்றும் அனைத்து  பள்ளிகளுக்கும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகடுகளை வழங்கிட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தினார். 

உடன் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் செல்வராஜ்,  முதல்வர் கீதா கோபிநாத், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...