காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவது தொடர் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனை அடுத்து இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ், மக்கள் நல கூட்டணி, திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இன்று பங்கேற்றுள்ளன. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 



தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் நடந்த ரயில், சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் 10,000  பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 98 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை, லாரி, ஆட்டோக்கள் அதிகளவில் இயங்கவில்லை. பெட்ரோல் பங்குகள், சினிமா தியேட்டர்கள் இயங்கவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் ஓரளவு இயங்கியது. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் சாலைகள், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், திமுக ,தேமுதிக ,விசி க, சிபிஐ ,சி பிம், அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில்  திருச்சி சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம்  நடத்தப்பட்டது. இதில்  ஈடுபட்ட சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பாரதி, சிபிஎம் மாவட்டக்குழு  உறுப்பினர் சின்னை பாண்டியன், மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் முருகன்,  விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழருவி உட்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் காய்கறி மார்க்கெட் இயங்கவில்லை. காலை 7  முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டது. 

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை போலீசாரின் தடையை மீறி முற்றுகையிட முயன்ற மக்கள்  அதிகாரத்தினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மாரிமுத்து  தலைமையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டங்கள் விவசாயிகளுடன் பல்வேறு கட்சிகள் இணைந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.  

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...