இந்து பிரமுகர் கொலை வழக்கு: மகனை விடுதலை செய்யக் கோரி பெற்றோர்கள் மனு

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தின் போது கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. அப்போது, பேருந்துகள், பொதுமக்களின் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், பலரின் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது. 

இந்நிலையில், சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தங்களது மகனை விடுவிக்கக் கோரி 5 பேரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



துடியலூரைச் சேர்ந்த குனசேகரன், ரத்தினம் தம்பதியினர் அளித்த மனுவில், ''தங்களது மகன் மணிவண்ணன். கூலி வேலை செய்து வருகிறான். கடந்த மாதம் 26ம் தேதியன்று வன்முறையில் ஈடுபட்டதாக் கூறி காவல் துறையினர் அவனை கைது செய்தனர். இன்றுவரை வெளியில் விடவில்லை. தங்களது மகனை உடனடியாக விடுதலை செய்து, உன்மையான குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும்'' என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...